ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்
பிள்ளை தானே வளரும்
இந்த பழமொழியின் உண்மையான விளக்கத்தை பார்ப்போம்
இன்னொரு வீட்டிலிருந்து, தன் வீட்டிற்கு வாழவந்த
மருமகளை மாமியார் நன்றாக கவனித்து கொள்ளவேண்டும்
என்ற எச்சரிக்கை செய்யும் பழமொழி.
இந்த பழமொழி ,
மாமியாருக்கு மட்டுமல்ல, அவர் மகனுக்கும் சேர்த்தே
எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
மனைவி கருவுற்றிக்கும் போது, அவளை நன்றாக
கவனித்து கொண்டால், அவள் வயிற்றில் வளரும்
தனது குழந்தை நன்றாக வளரும் என்ற பொருள் உண்டு.
இந்த பழமொழி அவள் கணவனுக்கு அறிவுரை சொல்லும்
வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணவன் வீட்டில்
வாழச்செல்லும் பெண்ணை, கணவனும் மாமியாரும்
நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்க்காக
சொல்லப்பட்ட பழமொழிதான் இது.
0 Comments