இஞ்சி தின்ற குரங்கு

                 என்ற பழமொழியின் விளக்கம் என்ன?

சிலர் சண்டை போட்டு கோவமாக இருக்கும் பொழுது, இஞ்சி தின்ன குரங்கு போல முகத்தை வைக்காதே” என்று சொல்வதை பார்த்து இருக்கிறோம்.

 

விளக்கம்

இஞ்சியை போன்ற தோற்றமுடைய

காட்டு மஞ்சள் கிழங்கின் மீது குரங்குக்கு

மிகுந்த விருப்பம் உண்டு. ஏனென்றால்,

  அந்த கிழங்கு காரமில்லாதது, சிறிது இனிப்பு சுவையும் அதில் உள்ளது. அதை ருசித்த  குரங்குக்கு, அதுபோலவே இருக்கும்

சாதாரண இஞ்சியை கண்டு ஏமாந்து கடித்து சுவைத்து விடும். அந்த நொடியில் ஏற்படும் முகபாவத்தையும் கோபத்தையும்  குறிப்பதுதான் இந்த பழமொழி