ஒரு சமயம் இரண்டு பூனைகள் ஒரு ரொட்டித்துண்டுக்காக சண்டையிட்டு கொண்டிருந்தன. அதை ஒரு புத்திசாலி குரங்கு அருகிலிருந்த மரத்தில் அமர்ந்து கொண்டு பார்த்து அந்த ரொட்டித் துண்டினை இரண்டு பூனைகளுக்கும் சமமாக பகிர்த்தளிப்பதாக அந்தக் குரங்கு தானாக வலிய கூறியது. அது ஒரு தராசு எடுத்து வந்து அந்த ரொட்டியை இரண்டு பங்கு ஆக்கி தராசு தட்டில் வைத்து நிறுத்தது. ஆனால் ஒரு பங்கு ரொட்டி பெரிதாக இருந்தது. அந்த இரண்டு துண்டுகளையும் சமமாக ஆக்குவதாகக் கூறி அந்த பெரிய துண்டை ஒரு கடிக்கடித்தது. அப்போது அந்தத் ரொட்டி துண்டு சிறியதாக ஆகிவிட்டது. மீண்டும் அது பெரிய ரொட்டித் துண்டை எடுத்து கடித்தது. அது மிகவும் சிறியதாக விட்ட்து. இப்படியே தொடர்ந்து இரண்டு துண்டுகளையும் கடித்து அங்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது. அப்போது தான் அந்தக் குரங்கு ரொட்டி முழுவதையும் சாப்பிட்டுவிட்டதை உணர்ந்தன பூனைகள். அதற்குள் குரங்கு ஓடிப் போய்விட்டது.
நீதி :- ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
0 Comments