ஓர் பூனையும், ஓர் நரியும் நல்ல நண்பர்கள், ஓர் நாள் அவைகளுக்குள் யார் அறிவு கூர்மையுள்ளவர் என்று பேச்சு வார்த்தை நடந்தது. "எனக்கு அநேக தந்திரங்கள் தெரியும்" என நரி தற்பெருமையாக கூறியது. ஆனால் பூனைக்கு ஒன்றே ஓன்று மற்றும் தெரியும். அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டபொழுது வேட்டைக்காரர்களின் துப்பாக்கி சத்தம் கேட்டது. அந்தப் பூனை மரம் ஒன்றின் மேல் ஏறிவிட்டது. ஆனால் நரியால் ஆடுவது, குதிப்பது எனப் பல தந்திரங்களை செய்தும் அவை வேலை செய்யவில்லை. வேடர்கள் அதனைப் பிடித்து விட்டார்கள்.
நீதி : தந்திர புத்தியை விட சொந்த அறிவு மேலானது

0 Comments