ஒரு காலத்தில் துணி வியாபாரி ஒருவர் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.அவர்கள் உண்மையாகவே நல்ல வசதியாக இருந்தார்கள். அவர்களின் வாத்து இட்டது ஒரு சாதாரண முட்டை அல்ல. அது ஒரு தங்க முட்டை. அனால் அந்த  வியாபாரி தினமும் கிடைத்ததை வைத்து திருப்தி அடையவில்லை. அவர் நிமிடத்திற்கு நிமிடம் பணக்காரனாக ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் 



அந்த மனிதர் தன் வாத்திடம் இருக்கும் அனைத்து முட்டைகளையும் ஒரே தடவையில் பெற்றுவிட வேண்டும் என விரும்பினார். ஆகவே, ஒரு நாள் அவருக்கு கடைசியாக ஒரு திட்டம் தோன்றியது. அந்த வாத்தைக் கொன்று எல்லா முட்டைகளையும் ஒரு சேர பெற்றுக் கொள்ள முடிவு செய்தார்.

ஆகவே, மறுநாள் அந்த வாத்து தங்கமுட்டை இட்டதும் அதனை கைகளில்  தூக்கிப் பிடித்து ஒரு கூர்மையான கத்தியால் அதன் உடலைக் கீறித் திறந்தார். அதற்குள் உடல்  முழுவதும் இரத்தம் தவிர, முட்டை இருப்பதற்கான அறிகுறியே இல்லை. இப்போது அவ்வியாபாரிக்கு இனி அந்த ஒரு முட்டை கூட கிடைக்காதே என்று துயரமாகி விட்டது.

ஒரு முட்டை கிடைத்தபோது அவரது வாழ்க்கை மேடுபள்ளம் இல்லாததாகச் சென்று கொண்டிருந்ததை அவரே மிகத் துயரமானதாக ஆக்கிக் கொண்டார். நாள் ஆக நாள் ஆக அவர் ஏழையாகிக் கொண்டே இருந்தார். கடைசியில் அவர் வறியவர் ஆகிவிட்டார். முட்டாளாகவும் கவலை உள்ளவராகவும் ஆகிவிட்டார்.


நீதி:- பேராசை பெரு நஷ்டம்