ஒரு தடவை எறும்பு ஒன்றும் ஈ ஒன்றும் யார் அதி முக்கியம் என சண்டை போட்டுக் கொண்டிருந்தன. " எறும்பே உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய். உன்னை எப்படி என்னோடு ஒப்பிட்டுப் பார்க்க எண்ணலாம். என்னைப் பார், நீ கடினமாக உழைக்க வேண்டும். நானோ பணக்கார்களிடமும், படித்தவர்களுடன் நேரத்தைப் போக்குகின்றேன். கோவிலினுள் சென்று அங்குள்ள பிரசாதங்களை ருசி பார்க்கின்றேன். அரசனின் கீரிடத்திலும், இராணியின் நெற்றியிலும் உக்காரலாம். நான் உழைக்காவிட்டாலும் நல்ல வாழ்க்கை எனக்கு", என்றது ஈ.



" மிகவுமே பெருமைப்பட்டுக் கொள்ளாதே. கோவிலுக்குள் நீ சென்றால் உன்னை வெறுக்கிறார்கள். நீ அரசனுடைய கீரிடத்திலோ,  இராணியின் நெற்றியிலோ அமர்ந்தால் விரட்டுகிறார்கள். சிரமமான நாட்களில் உனக்கென எதுவுமே மீதம் இருப்பது இல்லை. நீ சோம்பேறி என்பதால் குளிர் காலத்தில் நீ பசும் சாணத்தை உணவாகக் கொள்கிறாய். குளிரில் நீ நடுங்கும் போது, நானோ என்னுடைய வீட்டில் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றேன். எந்த சீதோஷண நிலைக்கும் நான் தயாராகவும் இருக்கின்றேன் " என்றது சிற்றெறும்பு  .


நீதி :- அடுத்தவர் தவறினை பார்ப்பதற்கு முன்பு உன் தவறினைப் பார்