ஒரு சமயம் நீண்ட புல் செடிகள் சூழ்ந்த ஒரு சிறிய ஏரியில் தவளைக் குழு ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அந்த தவளைகள் தங்களுக்கு ஓர் அரசன் இருந்தால் நல்லது என எண்ணின. அதனால் இறைவனிடம் எங்களுக்கு தயவு செய்து ஓர் அரசனை அனுப்பி வையுங்கள் எனக் கேட்க முடிவு பண்ணி கேட்டன. இறைவனும் அவைகளின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு ஒரு பெரிய மரக்கட்டையை நீர் தெரிக்கும் அளவுக்கு எறிந்தார். தவளைகளுக்குப் பயமாகி விட்டது, உடனே அங்கிருந்து துள்ளிக் குதித்தன.
உடனடியாக அந்தப் பெரிய மரக்கட்டை தங்களுடைய புதிய அரசன் ஆற்றல் உள்ளவன் அல்ல என்பதைத் தவளைகள் தெரிந்து கொண்டன. உண்மையிலே அதற்கு அசையக் கூட முடியவில்லை. மீண்டும் இறைவனிடம் எங்களுக்கு உண்மையான அரசன் ஒருவர் வேண்டும் என வேண்டின. இறைவனுக்கு மிகவும் கோபமாகி விட்டது.அந்தத் தவளைகளுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.
இறைவன் ஒரு கொக்கினை அந்த ஏரிக்கு அனுப்பினார். அந்தக் கொக்கு வேறுவிதமான அரசனாக இருந்ததால் அந்தத் தவளைகளை ஒவ்வொன்றாக விழுங்கிக் கொண்டு இருந்தது. 'உதவி உதவி ' என தவளைகள் சப்தமிட்டன. அனால் அது மிகவும் தாமதித்த செயலாயிற்று.
நீதி :- நீங்கள் மாற்றத்தைத் தேடுவதற்கு முன்பு உங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

0 Comments