ஒரு நாள் எதிர்பாராதவிதமாக ஓநாய் ஒன்று துணி துவைப்பவர் வீட்டினுள் நுழைந்து விட்டது. அந்த ஓநாய் தற்செயலாக நீல நிற சாயப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. அந்தச் சாயப் பாத்திரத்திலிருந்து வெளிவந்தது.. அதனுடைய தலைமுடியெல்லாம் நீல நிறமாக மாறிவிட்டது. அது அந்த வண்ணத்தைப் பார்த்து," ஓ! என்ன மேன்மையான வண்ணம் . நான் இந்த பிராணிகளின் அரசனாக இருக்க தகுதியானவன் தான்" என்றது.



அந்த ஓநாய் காட்டினுள் நுழைந்தது. எல்லா மிருகங்களும் நீல வண்ண ஒநாய்ப் பார்த்து ஆச்சர்யமடைந்தன. அந்த ஓநாய் ஒரு வித்தியாசமான மிருகமாக நினைத்துக் கொண்டன.

"ஓ பிராணிகளே! நீல வண்ணம் என்பது அரசர்களும் ராணிகளும் அணிவது. இந்தக் காட்டுப் பெண் தெய்வம் என்னை உங்களுடைய அரசனாக ஆக்கிருக்கிறாள். இன்று முதல் நான் உங்களுடைய அரசன்," என்றது ஓநாய். " நீங்களே எங்களுடைய அரசன் ஓ தலைவரே !" என்றன அந்தப் பிராணிகள்.

சிங்கங்களும் புலிகளும் கூட அதனை தங்களுடைய அரசனாக ஏற்றுக் கொண்டன. அதற்கு உதவி செய்ய ஆரம்பித்தன. அந்த நீல வண்ண ஓநாய் மிகப் பெருமை உடையதாக ஆகியது. அந்தக் காட்டில் இருந்த மற்றைய ஓநாய்களை வெறுக்க ஆரம்பித்தது.

ஒரு மாலைப் பொழுதில் வயதான ஓநாய் ஒன்று தன் நண்பர்களிடம் ,"அந்த நீல வண்ண அரசன் நம்மை வெறுக்கிறார். அது வேறு யாருமில்லை. ஓநாய் தான்.  நாமெல்லாம் கூடி ஓரு கனத்த ஊளையிட்டால், அவரும் திரும்ப  ஊளையிடுவார். சிங்கம் புலி எல்லாம் அவரை யார் என உடனே தெரிந்து கொள்ளவார்கள்," என்றது.

அதன்படி அந்த ஓநாய்கள் எல்லாம் கூடி ஒரு கனத்த ஊளையிட்டன. அதைக் கேட்ட நீல வண்ண ஓநாயும் பதிலுக்கு ஊளையிட்டது.

அந்த ஊளையைக் கேட்ட ஒரு புலி அது ஓநாய் என அறிந்து அந்த நீல வண்ண அரசன் மேல் பாய்ந்து கொன்றது.


நீதி:- நீ எதுவாக இல்லையோ அதுவாக நடிக்காதே