ஒரு காலத்தில் குளம் ஒன்றில் மூன்று மீன்கள் வாழ்ந்து வந்தன. அந்த குளத்தில் அவை மூன்றும் நெருங்கிய நண்பர்களாக பல ஆண்டுகள் வாழ்ந்தன.

 ஒரு நாள் மீனவன் ஒருவன் அந்த குளத்தைக் கடந்து செல்லும் போது அதிகமான மீன் அங்கு வாழ்வதைப் பார்த்தான் .

அவனுக்கு அதைப் பார்த்து ஆச்சரியமாகவும், இன்பமாகவும் இருந்ததால் உடனே தன்னைச் சேர்ந்தவர்களிடம் தெரிவித்தான். மறுநாள் காலை அங்கு வந்து அவைகளைப் பிடிக்க அவர்கள் முடிவு செய்தார்கள்.



புத்திசாலி மீன் ஒன்று இந்தப் பேச்சைக் கேட்டது.உடனே தன் மற்றைய இரு நண்பர்களிடமும்,  அந்நிலைப்பற்றி விளக்கி உடனே அந்தக் குளத்தை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு செல்லும் கருத்தைத் தெரிவித்தது.

இரண்டாவது மீனும் அதற்கு சம்மதித்து குளத்தை விட்டு வேகமாக வெளியேற சம்மதித்தது. மூன்றாவது மீனோ அது அவர்களுடைய தாய்விடு ஆகவே அதைவிட்டு வெளியறேக் கூடாது என்று ஏளனம் செய்தது.

மற்றைய இரு மீன்களும், அதை சமாதானப்படுத்த முடியாமையால் அந்த குளத்து நீரை விட்டு வெளியேற முடிவு செய்தன. அந்த மீனை அதனுடைய முடிவை தேர்ந்தெடுக்கும்படி விட்டுவிட்டன.

மறுநாள் மீனவனும் அவனுடன் வந்தவர்களும் வலையை வீசி போதுமான மீன்களைப் பிடித்தார்கள். குளத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறிய மூன்றாவது மீனும் அவர்களிடம் பிடிப்பட்டது. முன்பே வெளியேற இரண்டு மீன்களும் காப்பாற்றப்பட்டன.

நீதி :- ஆபத்து வரும்போது உடனே செயலில் இறங்க வேண்டும்.