ஒரு காலத்தில் விவசாயி ஒருவர் அவர் மனைவியுடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு மகன் ஒருவன் இருந்தான். அந்த விவசாயிக்கு கீரியும் ஒன்று வளர்ப்புப் பிராணியாக இருந்தது. அந்த குழந்தையும் கீரியும் ஒருவரை ஒருவர் அன்பு கொண்டிருந்தனர். விளையாடுவதிலும் இருவரும் சேர்ந்திருந்தனர்.
ஒரு நாள் விவசாயி தன்னுடைய வயலில் வேலையில் மிகவும் ஈடுபாடுடன் இருந்தார். விவசாயின் மனைவியும் சந்தைக்குச் சென்றிந்தாள். குழந்தை தன் தொட்டிலில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான். கீரியும் தொட்டிலுக்கு அடியில் படுத்திருந்தது. அந்த சமயம் ஒரு நல்ல பாம்பு வீட்டினுள் வந்து தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை நெருங்கியது. கீரி நல்ல பாம்பின் மேல் பாய்ந்தது. அதனுடன் சண்டையிட்டது. நல்ல பாம்பும் திரும்பித் தாக்கியது. இரண்டிற்கும் இடையே மூர்க்கமான சண்டை நிகழ்ந்தது.கடைசியில் கீரி பாம்பைக் கடித்துக் கொண்டது.
விவசாயின் மனைவி சந்தியிலிருந்து திரும்பி வருவதைக் கீரி பார்த்தது. அவரை வரவேற்பதற்காக அவரிடம் சென்றது. அந்த கீரியின் வாய், நகங்களில் இரத்தம் சொட்டுவதை அவள் பார்த்தாள். அது தன் மகனை தாக்கியிருப்பதாகத் தவறான முடிவெடுத்தாள்.
ஒரு நீள கொம்பினை எடுத்து கீரியை பலமான அடி கொடுத்துவிட்டு வீட்டினுள் சென்றாள். அங்கு செத்த பாம்பு ஒன்று தொட்டிலுக்கு அருகே கிடந்ததை பார்த்து அதிர்ச்சியானாள். தன் தவறை உணர்ந்தாள். அவளுடைய வருத்தத்திற்கு எல்லையில்லை.
நீதி := ஆராயாமல் எதையும் செய்யாதே.

0 Comments