ஒரு நாள் ஓநாய் ஒன்று கிராமம் ஒன்றைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அந்தக் கிராமத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டமொன்றைப் பார்த்தது. அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என தெரிந்து கொள்ள அந்த நயவஞ்சக ஓநாய் கூட்டத்தின் அருகை சென்றது. அங்கே இரண்டு ஆடுகள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தது. அந்த இரண்டு ஆடுகளும் நல்ல தீவனத்தால் கொழுத்து இருந்தன. ஆகவே, அந்தச் சண்டை மதிப்பு மிகுந்ததாக இருந்தது.
சண்டை போட்டுக் கொண்டிருந்த இரண்டு ஆடுகளையும் அங்கிருந்த மக்கள் கூச்சல் இட்டுக் கொண்டும், கை தட்டிக் கொண்டும் உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார்கள். ஓநாயும் அந்த விளையாட்டைக் காண கூடியிருந்த மக்களோடு சேர்ந்து கொண்டது. ஆடுகள் இரண்டுக்கும் அடிபட்டு இரத்தம் சாலையில் கொட்டியது. அடிபட்ட ஆடுகளின் இரத்தம் கொட்டியதைப் பார்த்த ஓநாய்க்கு தன் புலனை அடக்க முடியவில்லை. அந்த ஆடுகளின் கதகதப்பான இரத்தத்தை ருசி பார்க்க விரும்பியது. அந்த ஆடுகளின் மேல் பாய்ந்தது ஓநாய். அந்த இரண்டு ஆடுகளும் ஓநாயை விட
பலசாலிகளாக இருந்தன. இரக்கம் இல்லாமல் அந்த ஓநாயின் மேல் ஆடுகள் பாய்ந்தன. அந்த ஓநாய் இறந்தது.
நீதி:-எதிலும் இறங்குவதற்கு முன் யோசி.

0 Comments