வெகுநாட்களுக்கு முன்பு ஒரு குடியிருப்பில் சில எலிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தன. அந்தக் குடியிருப்புக்கு அருகே ஒரு பெரிய குளம் இருந்தது. அந்தக் குளத்திற்கு ஒரு யானைக் கூட்டம் நீர் அருந்த வந்தது. அங்கு வரும் சமயம் அதன் வழியில் உள்ள அநேக எலிகள் மேல் அவைகளின் கால்களை வைத்து நசுங்கின. அதன்பின் ஒவ்வொரு நாளும் யானைக் கூட்டம் ஏரிக்கு வந்தன. அங்கு வந்த போதெல்லாம் அதிகமான எலிகள் மேல் ஏறி அவைகள் கொல்லப்பட்டன. அதனால் எலிகளின் எண்ணிக்கை குறைந்தது.
அந்த எலிகள் யானைகளை சந்திக்க முடிவு செய்தது. எலி அரசன் யானை அரசனைச் சந்தித்து வேறு பாதையை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொண்டது. அந்த யானைத் தலைவன் மிகவும் இளகிய மனதுடையது. அது தன் யானைக் கூட்டத்திடம் எலிகளின் கோரிக்கையை ஏற்று வேறுபாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூறியது. அதற்கு அந்த எலிக் கூட்ட தலைவன், " ஐயா நாங்கள் எப்போதும் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். உங்களுக்கு உதவி தேவைப்படும் போது நாங்கள் உதவு தயாராக இருப்போம் " என்றது. அதற்கு யானைத் தலைவன் சிரித்து விட்டு " சிறிய எலிகளாகிய நீங்கள் எப்படி எங்களைப் போன்ற பெரிய பிராணிகளுக்கு உதவ முடியம் ? இருந்தாலும் உங்களுடைய இந்த முன்னேற்பாட்டிற்கு நன்றி ." என்றது.
ஒரு நாள் யானை பிடிக்கும் வேடுவ கூட்டம் காட்டிற்குள் வந்தது. பெரிய வலைகளில் யானைகளைப் பிடித்தார்கள். யானைகள் தங்களால் முடிந்தளவு முயற்சி செய்தன. ஆனால் வெற்றி கிட்டவில்லை. அந்த வழியாகச் சென்ற எலி ஒன்று யானைகள் வலையில் மாட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து தன் தலைவனிடம் சென்று அதை அறிவித்தது. அந்த யானைக் கூட்டத்தை விடுவிக்க அந்த எலி அரசன் தன்னுடன் சில எலிகளை அழைத்துச் சென்றது. அந்த வலையில் பல பகுதிகளைக் கடித்து யானைகள் வெளிவர ஏதுவாக்கியது. யானைகள் எலிகளிடம் அதன் உதவிக்கு நன்றி தெரிவித்தது.
நீதி :- பார்த்த மாத்திரத்தில் யாரையும் குறைத்து எடை போடாதே.
0 Comments