ஒரு சமயம் கிராமம் ஒன்றில் பால் விற்கும் எளிய பெண் வாழ்ந்து வந்தாள். அவள் பசுக்களிலிருந்து பால் கறந்து நரகத்திற்குச் சென்று விற்று பணம் சம்பாதித்தாள். ஒரு நாள் சந்தைக்கு ஒரு பாத்திரம் முழுவதும் பால் நிரப்பி தன் தலையில் சுமந்து கொண்டு சென்றாள்..   

இந்தப் பால் விற்பதன் மூலம் கொஞ்சம் பணம் கிடைக்கும். அப்பணத்தில் நான் ஒரு கோழியும், சேவலும் வாங்குவேன். அந்தக் கோழி முட்டைகள் விடும். அப்போது பாலும் முட்டைகளும் விற்று  நிறைய பணம் கிடைக்கும்.  அப்பணத்தைக் கொண்டு இன்னவும் நிறைய கோழிகள் வாங்கி நான் ஒரு பண்ணையின் சொந்தக்காரி ஆவேன். நான் ஒரு பணக்காரி ஆவேன். மக்கள் என்மீது பொறாமைப் படுவார்கள். என்னிடம் உதவி கோரி வருவார்கள்.

ஆனால் நான் இப்படியும், அப்படியும் தலையை அசைத்து முடியாது என்பேன் என எண்ணியவாறு சென்றாள். அவள் தலையை இப்படியும், அப்படியும் அசைத்ததும் தலைக்கு மேலிருந்த பாத்திரம் தரையில் விழுந்து பால் முழுவதும் தரையில் வழிந்தோடியது. அந்தப் பெண் அழுதாள். பணம் எதுவும் கிடைக்காததால் அன்று முழுவதும் பட்டினியாக இருந்தாள்.


நீதி:- போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.