யானைக் கூட்டம் ஒன்று அடர்ந்த காடு ஒன்றில் வாழ்ந்து வந்தது. அங்கு இருந்த குட்டை ஒன்றில்,  அவை இருந்து கொண்டு மற்றைய பிராணிகளை நீர் அருந்த விடாமல் தடுத்தன. முயல்களின் அரசன் யானைகளின் அரசனிடம் சென்று தங்கள் நிலையினைக் கூறியது. அது அதனை முரட்டுத்தனமாக விரட்டியது.

அந்த யானைக்கு பாடம் ஒன்றைக்  கற்பிப்பதற்காக,  அந்த முயல் சந்திரக் கடவுளை சந்தித்ததாகவும், அதனிடம் தான் சந்தோஷமில்லாமல் இருப்பதாகக் கூறியதாகவும் யானையிடம் சொன்னது. 

அதை நம்பாத யானை தன்னை சந்திரக்கடவுளிடம் அழைத்துச் செல்ல கேட்டுக் கொண்டது. ஒரு பௌர்ணமி நான் அன்று அந்த முயல் யானையை ஒரு குளத்திற்கு அழைத்துச் சென்றது. சந்திரனின் பிம்பத்தைக் குளத்து நீரில் காட்டியது. அதைப்பார்த்ததும் சந்திரக்கடவுள் தங்கள் கூட்டத்தைத் தண்டிப்பதற்க்காக இறங்கி வந்திருப்பதாக எண்ணி தன் கூட்டத்தின் குணத்தை மாற்றிக் கொண்டது.


நீதி: பெரிதாகத் தோன்றும் சிக்கலை சிறிய அறிவுக் கூர்மை தீர்த்து விடும்.