ஒரு கோடை நாள் ஒன்றில் ஒரு எலி தன் பொந்திலிருந்து வெளியே வந்து எருது ஒன்று மரத்தின் அடியில் படுத்திருப்பதைப் பார்த்தது.அந்த எருதின் குறட்டை ஒலி அந்த எலிக்கு ஆச்சரியம் அளித்தது. அந்த எருதுக்கு மிக அருகில் வந்து எருதின் நசித் துவாரங்களைப் பார்த்தது. அந்த எலி எருதின் நாசித்துவாரம் உள்ளே சென்று வேடிக்கைக்காக அதனைக் கடித்தது.
எருது விழித்துக் கொண்டு வலியால் துடித்தது. பயந்து போன எலி அங்கிருந்து ஓடியது. எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அந்த அளவு வேகமாக ஓடி பொந்தினுள் நுழைந்தது. அந்த அவமானப்பட்ட எருது அத்தனை சுலபமாக விடுவதாக இல்லை. "ஒரு சிறிய பிராணியே ஒரு பலசாலியான எருதை நீ தொந்தரவு கொடுத்தாய். உனக்கு நான் ஒரு பாடம் புகட்டுவேன்." எனக் கத்தியது.
"ஓ! பலசாலி எருதுவே நான் உனக்குத் தொந்தரவு தர விரும்பவில்லை . ஒரு விளையாட்டுக்காகவே உன்னைக் கடித்து விட்டேன்." என்றது எலி. அந்தச் சிறிய எலியை எப்படியும் தண்டிப்பது என்பதில் உறுதியாய் இருந்தது அந்த எருது.
அது தன் தலையை அங்கிருந்த சுவரின் மேல் இடித்தது. அந்தச் சுவர் மிக கடினமானதாக இருந்தது. எருது பல தடவை அதன் மீது தலையை வைத்து இடித்தது. அந்தச் சுவர் உடையவில்லை. அந்த எருதுவின் கோபத்தையும், சோர்வையும் பார்த்த எலி, "ஓ! புத்தியில்லா பலசாலி எருதுவே ஒன்றுமில்லா காரியத்திற்காக நீ ஏன் உன் மண்டையை உடைத்துக் கொள்கிறாய்? பலசாலியாகிய நீங்கள் எப்போதும் நினைத்து கிடைத்து விடும் என எண்ண வேண்டாம்," என்று கூறி ஏளனம் செய்தது. அந்த எருதுக்கு அது பிடிக்கவில்லை. அங்கிருந்து அமைதியாக வெளியேறியது.
நீதி: பலம் எப்போதும் தீர்வாகாது.
0 Comments