சலவைக்காரர் ஒருவர் கழுதை வைத்திருந்தார். அந்தக் கழுதை பகல் நேரங்களில் பொதி சுமக்கும். இரவில் சுதந்திரமாக விடப்படும். அது ஒரு நாள் ஓநாய் ஒன்றினைச் சந்தித்தது. அதனுடன் சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் தோட்டங்களிலிருந்து காய்கறி சாப்பிடுவதில் கழுதைக்கு ஆனந்தம். ஒரு நாள் இரவு கழுதைக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் பாட விருப்பப்படுகிறேன் என ஓநாய்யிடம் கூறியது. காய்கறிகளை தோட்டத்திலிருந்து திருடும் போது பாடுவது நல்ல யோசனையில்லை என்று ஓநாய் எச்சரித்தது. அந்தக் கழுதை ஓநாயின் வார்த்தைகளை அலட்சியம் செய்து விட்டு தன் மனம் திருப்தி படுமளவு பாடியது. ஓநாய் தன்னைக் காத்துக் கொள்ள ஓடிவிட்டது. கழுதையின் சப்தம் கேட்டு விவசாயிகள் விழித்துக் கொண்டனர். தங்களது தோட்டத்திலிருந்து காய்கறிகளைச் சாப்பிட்டதற்காக கற்களால் அடித்தனர்.
நீதி: எதையும் செய்வதற்கு தகுந்த இடம், நேரம் இருக்கிறது.
0 Comments