ஒரு காலத்தில் இரு வாத்துகளும் ஒரு ஆமையும் ஆக மூவரும் மிகச் சிறந்த நண்பர்களாக வாழ்ந்தார்கள். ஒரு நாள், பெரியதொரு வறட்சியை எதிர் கொண்டார்கள். அவர்கள் வாழ்ந்த ஏரி நீரில்லாமல் ஆகி விட்டது. அவர்கள் மூவரும் அந்த ஏரியை விட்டு விட்டு வேறு ஒரு புதிய ஏரிக்குச் செல்ல முடிவெடுத்தனர். அந்த ஆமைக்கு பறக்க முடியாது என்பதால், அது வாயால் பிடித்திருக்கும் மரக்குச்சியினை இரண்டு வாத்துகளும் தூக்கிச் செல்வதாக திட்டமிட்டன. அந்த ஆமையும் மௌனமாக இருக்க சம்மதித்தது.
வாத்துகள் ஆமையை குச்சியில் தூக்கிச் செல்வதை வழியில் பார்த்த மக்கள் அந்த வித்தியாசமான ஏற்பாட்டைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். " எதற்காக அவர்கள் சிரிக்கிறார்கள் ?" என தன் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஆமை பேசியது. அதனால் கீழே விழுந்து செத்தது. அது அமைதியைக் காத்திருந்தால் தன் உயிரினைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.
நீதி:- விதியினை மாற்றமுடியாது.

0 Comments