தன் தவறை  உணர்ந்து கொண்ட அரசன் –

சிறுகதை விளக்கம்

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான். அவன் அதிகாலையில் எழுந்தவுடன்,

ஜன்னல் வழியாக சூரிய உதயத்தை பார்ப்பது அவனது வழக்கமாக இருந்தது.



ஒரு நாள் காலையில் அவன் ஜன்னல் கதவை திறந்த பொழுது சூரிய உதயத்திற்கு

பதிலாக, ஒரு பிச்சைக்காரனை கண்டான்.  





உடனே அரசன், போயும் போயும்  இவன்

 முகத்திலா விழித்தேன் என்று வெறுப்புடன்  திரும்பினான். திரும்பிய வேகத்தில்

அருகில் இருந்த சுவற்றில்  அரசன் தலை அடிபட்டு ரத்தம் கொட்டியது .

உடனே கோபமடைந்த அரசன் பிச்சைக்காரனை கட்டி இழுத்து வருமாறு கட்டளையிட்டான். 




காவலர்கள், அவனை இழுத்துக்கொண்டு வந்து அரசன்

முன்னே நிறுத்தினர். தனது காயத்துக்கு காரணமான  அந்த பிச்சைக்காரனை

தூக்கில் போடுமாறு கட்டளையிட்டான். 

இதை கேட்ட அந்த பிச்சைக்காரன்

கலகலவென்று சிரித்தான்.  


பிச்சைக்காரனை நோக்கி, பைத்தியக்காரனே!

ஏன் சிரிக்கிறாய்?. என்றான்.

அரசே! என் முகத்தில் விழித்ததால், உங்கள் தலையில்  காயம் ஏற்பட்டது.

ஆனால் உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப்போகிறது.

அதை நினைத்து சிரித்தேன் என்றான்.



தன் தவறை  உணர்ந்து கொண்ட அரசன், உடனே தண்டனையை ரத்து செய்து, 

பிச்சைக்காரனை விடுவித்தான்.

இதைத்தான்பரிசுத்த வேதாகமத்தில் 

இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறுகிறார் 



மத்தேயு 18 அதிகாரம் : 10 


    "இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."


    விளக்கம் :


    இயேசு கிறிஸ்து கூறியபடி, ஒருவரையும் அற்பமாகவோ,


     கேவலமாகவோ நினைக்கவே  கூடாது. 


    ஒருவருக்கொருவர் அன்பாயும், மனஉருக்கமாயும்


     இருந்து நன்மை செய்ய வேண்டும்.


     மேலும் பரிசுத்த வேதாகமத்தில், நன்மை செய்யவும் ,

     

    தான தர்மம் பண்ணவும் வேண்டும், இப்படிபட்ட 


    லிகளின் மேல் தேவன் பிரியமாக இருக்கிறார். 


    நம்மளால் முடிந்த வரை நன்மை செய்வோம்.