இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

 

செந்தமிழ் என்ற நாட்டை, செந்தமிழன் என்ற அரசன் ஆண்டு கொண்டிருந்தான்.

திடிரென்று, ஒரு நாள் அரசனுக்கு தென்னை தோட்டம் அமைக்க

வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

அரண்மனைக்கு அருகில் இருந்த நிலத்தை பண்படுத்தி தென்னை

மரங்களை நட்டார் அரசன்.

தென்னை மரங்களை பாதுகாக்க ராயப்பன் என்ற காவலனை நியமித்தார்.

ராயப்பன் நல்ல உழைப்பாளி. ஆனால் அவன் ஒரு முட்டாள்.

இரவு பகலாக தென்னை மரங்களை காத்து வந்தான் ராயப்பன்.

அதனால் மிகவும் சோர்வடைந்தான்.

ஒரு நாள், ராயப்பன் யோசித்தான், தென்னை மரங்களை பார்த்துக்கொள்வதுதானே

என் வேலை, இதை ஏன் நான் வீட்டில் வைத்து பார்த்து கொள்ளக்கூடாது?..

என்றெண்ணி எல்லா மரங்களையும் வெட்டி தன் வீட்டிலே வைத்தான்.

ஒரு நாள்,  தென்னை மரங்களை சுற்றிப்பார்க்க வந்த அரசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 விசாரித்த பொழுது, காவலாளி ராயப்பன் சொன்ன பதிலை கேட்டு

திகைத்து நின்றார்.

யாருக்கு என்ன வேலை கொடுத்தால் நல்லபடியாக செய்து முடிப்பார்கள் என்று

யோசிக்காமல் உன்னிடம் இந்த வேலையை கொடுத்தது என் தவறு 

என்றார் அரசர்.

இதைத்தான்,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்